பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் அம்சவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விருத்தம்பாள் என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் விருத்தம்பாள் தனது சொந்த கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயதுடைய மர்மநபர்கள் 2 பேர் கடையில் பொருட்கள் வாங்க வந்தது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 லட்சம் மதிப்புடைய தங்க தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.