Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரண்டு நாட்களில் 8 குழந்தை திருமணங்கள், ஊரடங்கு காலத்தில் 130 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…!!!

கொரோனா ஊரடங்கு காலத் தொடக்கம் முதல் தற்பொழுது வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய மூன்று மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இரகசிய புகார்கள் சமூக நலத்துறைக்கு தொடர்ந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் வேலூர், பாலமதி, சத்தியமங்கலம் மற்றும் கரும்பு புத்தூரில் 16 வயதான 3 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

அதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் வேலக்குப்பம் பகுதியில் நடக்கவிருந்த 16 வயது மற்றும் 17 வயது சிறுமியின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆரப்பாக்கம் பகுதியில் 13 வயது சிறுமிக்கும் மற்றும் காவேரிப்பாக்கத்தில் 16 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த குழந்தை திருமணங்கள் என இரண்டு நாட்களில் 8 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து கொடுப்போம் என சமூக நல அலுவலர்கள் எழுதி வாங்கினார். செலவுகள் குறைவாக இருக்கும் என்பதாலும் காதல் வயப்பட்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறி செல்வதும் குழந்தைத் திருமணங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 130 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |