2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு சஞ்சய் ஜெய்ந்த் இந்த வழக்கில் ஏற்கனவே நீதி விசாரணைக்கு நேரம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவை வீணாகக் கூடாது எனவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திரு பிறஜேஷ் செதி ஓய்வு பெறுவதற்கு முன்பு வழக்கின் வாதங்கள் முடியவில்லை என்றால் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டியிருக்கும் என வாதிட்டார். மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.