Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கேசவநேரி கிராமத்தில் சேர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹன்சிகா, அனுஷ்கா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சல் அடைந்த சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்து தனியாக சென்று விட்டார். இந்நிலையில் உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சேர்மராஜ் கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அவருடைய மனைவி சுகன்யா மற்றும் 2 மகள்களையும் காணவில்லை. இதுகுறித்து சேர்மராஜ் சுகன்யாவின் பெற்றோர் வீட்டில் விசாரித்தபோது அவர்கள் அங்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் சேர்மராஜ் அவர்களை பற்றி விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சேர்மராஜ் வள்ளியூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுகன்யா மற்றும் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |