Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூதாட்டம் தப்புடா தம்பி….. பேசாம போ இல்ல……. போலீசை மிரட்டிய 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் 450 ரொக்கப் பணத்தையும், சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |