Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது.

இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 பேர் மரணமடைந்துள்ளார். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, கடத்த மே 7ம் தேதி நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்கப்பட்டன.

இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதனை விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுபோதைக்காக திரவம் குடித்து நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |