தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரும்புபவர்கள் இரண்டு பேர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாஜகவை சாடியுள்ளார்.
திமுக அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, தமிழகத்தில் உள்ள இருண்ட ஆட்சியை தொடர விரும்புறவங்க ரெண்டே ரெண்டு தரப்பு தான். ஒன்னு பழனிச்சாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு எடப்பாடி பழனிச்சாமியும், அவருடைய கொள்ளை கூட்டத்தை இயக்கி வருகிற மத்திய பாஜக ஆட்சியாளர்கள்.
ஏனென்றால் தலையாட்டி பொம்மை ஆட்சி, தமிழ் நாட்டில் தொடர்ந்தால் தான்… நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து, கோச்சிங் சென்டரில் தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கோச்சிங் சென்டர் களாக கொள்ள லாபத்தை அதன் மூலமா சம்பாதிக்க முடியும். அதே போல பல்லாயிரம் இன்ஜினியரிங்களை உருவாக்கி, பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து சொல்லி அதனை அபகரிக்க முடியும்.
வேளாண் திட்டங்கள் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, தங்களுக்கு வேண்டியவர்கள் கைகளில் நிலங்களை ஒப்படைக்க முடியும். மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் பறிக்க முடியும். ஊழல் என்கிற பெயரில் அதிமுக அமைச்சர்கள் தொடங்கி தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அதை காட்டி மிரட்டியே தாங்கள் நினைப்பதை சாதித்துக்கொள்ள முடியும். இதுபோன்ற மோசடி வேலைகள் நடப்பதற்கு இருட்டு தானே வசதியா இருக்கும். அதனால இந்த இருண்ட ஆட்சியில் தொடர வேண்டும் என்று மத்தியில் இருக்கக்கூடியவர்கள் விரும்பி கிட்டு இருக்காங்க என ஸ்டாலின் தெரிவித்தார்.