ஜெர்மனியில் முதல் முறையாக “ஒமிக்ரான்” கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களில் உருமாற்றமடைந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” என்ற கொரோனா வைரஸ் ஜெர்மனியிலும் பரவ தொடங்கியுள்ளது.
அதாவது ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.