Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குண்டர் சட்டத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் தோட்டம் பகுதியில் தொழிலதிபரான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முத்துசாமி அமராவதிபாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்து காருடன் முத்துசாமியை கடத்தி சென்று அவரிடமிருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை அருகில் அவரை தள்ளி விட்டு காரை திருடி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் வசிக்கும் சிவக்குமார், அன்னபாண்டி, டேவிட்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிவகுமார் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், அன்னபாண்டி மீது 8 வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

 

Categories

Tech |