வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியன் மற்றும் அவரின் தந்தையை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து 2 பேரையும் குண்டர் தடிப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார். எனவே கலெக்டர் முரளிதரன் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவை இன்ஸ்பெக்டர் சரவணன் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளார்.