Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மது வாங்க பணம் வேண்டும்…. வாலிபரின் வெறிச்செயல்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மற்றும் சிறுவனை கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநூல் சத்திரம் விநாயகர் கோவில் தெருவில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சுகுணா என்ற மனைவியும், புவிஅரசு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது குடும்பத்துடன் சுகுணாவின் தாயார் நாகயம்மாள்யுடன் வசித்து வருகின்றனர். அதன்பின் இவர்களது பக்கத்து வீட்டில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி நாகயம்மாளிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் நாகயம்மாள் பணம் தர மறுத்ததால் நாகயம்மாளை வீட்டுக்குள் தரதரவென இழுத்துச் சென்று அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டி உள்ளார். இதனையடுத்து நாகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவன் புவிஅரசனையும் அவர் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்த யுவராஜை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |