Categories
உலக செய்திகள்

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவர்…. கைது செய்த போலீசார்…. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்….!!

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை விண்ட்சர்  கோட்டையில் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகில் கடந்த 25ஆம் தேதி 31 வயது நபர் மற்றும் 29 வயதுடைய அவரது காதலி ஆகிய இருவரும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒருவர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ தனது இல்லத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது கைதாகியுள்ள இந்த இருவர் போலீசாரின் சொந்த பிணைப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் முதலில் பெண் ஒருவர் மட்டும் விண்ட்சர் கோட்டைக்குள் நுழைந்த போதே பாதுகாப்புகள் குறித்து எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது சம்பவம் இது போல நடந்தது அதிகாரிகளின் கவனக் குறைவுகள் ஆகும். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

Categories

Tech |