Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடைகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் சந்தை அருகில் சசி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையில் மர்ம நபர்கள் 8 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பத்மராஜ் என்பவரது கடையில் இருந்து 7 ஆயிரம் ரூபாய், விஜயகுமாரின் கடையில் இருந்து 1,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குலசேகரம் அண்ணா நகரில் வசிக்கும் ஜஸ்டின்ராஜ் மற்றும் எட்வின் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் திருவட்டார் சந்தையில் இருக்கும் கடைகளில் பணத்தை திருடியவர்கள் என்பதும் உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |