மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுரையின் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர்