Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோவூர் அருகில் முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து முதியவரை சரமாரியாக அடித்து அவரிடம் இருந்த பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபர்களை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கெருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் ஹேமந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் எலக்ட்ரீசியனாக பணிபுரியும் இருவரும் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |