Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்… சட்டென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில்  இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டாம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் இருக்கும் அரசு உர தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பழனிசாமி அவருடைய நண்பரான சந்திரசேகரன் என்பவருடன் தொழிற்சாலையின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து எரியோட்டில் இருந்து வேகமாக சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மற்றும் சந்திரசேகர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். அவரின் நண்பரான சந்திரசேகரன் உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் படுகாயமடைந்த சந்திரசேகரனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சந்திரசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |