மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான வேலுமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான தவமணி என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சென்னை-கிருஷ்ணகிரி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி பேருந்து பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதன் பின் அருகில் உள்ளவர்கள் வேலுமணியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேலுமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தவமணி மற்றும் வேலுமணியின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.