கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.