Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி சுத்திட்டு இருக்காங்க… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கனாங்குடி கட்டளை வாய்க்கால் பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி கொண்டிருப்பதாக நவல்பட்டு காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல், சரண்ராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் உரிய லைசென்ஸ் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |