Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 போலீஸ்ஸை நிக்க சொல்லுங்க….! டாஸ்மாக் கடைய பாத்துக்கோங்க….!

மதுக்கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது பலரின் கண்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படையினர் அல்லது தன்னார்வலர்கள் ரெண்டு பேரையும் பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 10 மணி முதல் ஒரு மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதினரை அனுமதிக்கலாம் என்றும், 3 மணி முதல் 5 மணி வரை குறிப்பிட்ட வயதினர் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |