ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு கதைகளிலிருந்து 6,000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல கண்ணன் நேற்று காலையில் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அங்கு கடை பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பழனிச்சாமியின் கடையின் பூட்டும் உடைந்திருப்பதை பார்த்ததும் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து இருவரும் ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.