Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு தனியாக சென்ற சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள்… காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை என்னனு தெரியுமா?…

ஆஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகளை பத்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 4 பேர் மீது 160 வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, 15 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் Snap Chat-ல் பழக்கமான நண்பரை நேரில் சந்திப்பதற்காக  பிரிஸ்பேன் நகரில் உள்ள Calmvale District பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு Snap Chat-ல் பழக்கமான நபர் உட்பட பத்து பேர் சேர்ந்து இரண்டு சிறுமிகளுக்கும் போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.

பின்னர் அரை மயக்கத்தில் இருந்த சிறுமிகளை மதுபான பாட்டிலை உடைத்து கொன்று விடுவதாக மிரட்டி இருவரையும் மாறி மாறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் 19, 20, 21, 22 ஆகிய  வயதுடைய நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவர்  மீதும் கற்பழிப்பு, கற்பழிப்பு நோக்கத்துடன் தாக்குதல், அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அநாகரீகமாக  புகைப்படம் எடுத்தல் போன்ற 40 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு மொத்தம் 160 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட  நான்கு பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |