வீட்டிற்குள் புகுந்த இரண்டு கட்டு விரியன் பாம்புகள் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வனத்தில் விடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகள், கோவில்கள், வீடுகள் மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை சுகாதாரத் துறை ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த சமயத்தில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் கிருமி நாசினி தெளித்து கொண்டிருக்கும்போது இரண்டு பாம்புகள் அவரது வீட்டின் உள்ளே செல்வதை சுகாதாரத்துறை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த 2 கட்டு விரியன் பாம்பை தேடி கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அதை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர்.