Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட மனைவி… தப்பியவர்களுக்கு வலைவீச்சு… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

ப்ளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்தியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் வசித்து வருபவர் தொழிலாளி முருகன். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறியதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவர்கள் முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே முருகன் அந்த மாணவியுடன் தப்பிச் சென்றுள்ளார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் தலைமறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக இருவரையும் தேடி வந்துள்ளனர்.

அதன்பேரில் முருகன் மற்றும் அந்த மாணவி இருவரும் கேரளாவில் இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதிக்குச் சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |