Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இத சமையலுக்கு பயன்படுத்த கூடாது” 2 டன் உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!

2 டன் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மினி லாரியில் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பின் பாக்கெட்டுகளில் இருந்த முகவரியும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் மினிலாரி மற்றும் 2 டன் அயோடின் கலக்காத உப்பை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கூறியதாவது, பறிமுதல் செய்யப்பட்ட உப்பு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். இதனையடுத்து பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உப்பை பேக்கிங் செய்த உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு துறை தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் பொதுமக்கள் உப்பு வாங்கும் போது அதில் முழு முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும், அயோடின் கலந்த உப்பு தானா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனையடுத்து அயோடின் கலக்காத உப்பை சமையலுக்கு பன்படுத்த கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |