ஐ.பி.எல் 2௦21 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் அணைத்து அணிகளும் தங்களது முழு திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை பார்பதர்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் திரண்டிருக்கும். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆரம்பிக்க உள்ளது. இந்த தொடர் இந்தியாவிற்குள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் 2௦21 தொடருக்கான ஏலமானது பிப்ரவரி 19 ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து கூறும்போது “இரண்டு ஐபிஎல் அணிகள் இந்த ஏலத்தில் தங்களது திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் “ப்ளே ஆப்” சுற்றுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தற்போது நடைபெறும் இந்த ஏலத்தின் போது இரண்டு அணிகளும் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய முக்கிய வீரர்களான சரண் சர்மா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளனர். மேலும் கேதார் ஜாதவ், முரளி விஜய் ஆகியோர் தற்சமயம் விலக்கப்பட்டும் உள்ளனர். இந்த ஏலத்தை சிஎஸ்கே அணி போதிய கையிருப்பு தொகையுடன் விளையாட தயாராக உள்ளது.
அதேபோல் இந்த ஏலத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரே ரஸ்ஸல், சுப்மன் கில், மார்கன் ஆகிய வீரர்களை தங்கள் அணியில் வைத்துக்கொண்டும் கிறிஸ் கிரீன், டாம் பாண்டன் ஆகிய வீரர்களை விலக்கியும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.