Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சென்னையில் 2 முறை தோல்வி….. மஹாராஷ்டிராவில் தேர்ச்சி….. நீட் ஆள் மாறாட்டம்…. சிக்கிய மருத்துவரின் மகன்…!!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை மருத்துவரின் மகன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டுமுறை சென்னையில் இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்த அந்த மாணவன் மஹாராஷ்டிராவில் தேர்வு எழுதி உள்ளார்.

இது குறித்த சந்தேகம் எழுந்தது முதல் தேனி மருத்துவ கல்லூரி வகுப்புக்கு மாணவன் வர வில்லை என்றும் சொல்லப்படுகின்றது.இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து மாணவனின் தாயாரிடம் கேட்டபோது அவர் முரண்பட்டு பேசுவதாகவும் ,புகாருக்கு உள்ளான மாணவர் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |