Categories
தேசிய செய்திகள்

2 வயது குழந்தைக்கு எச்சரிக்கை நோட்டீஸ்…. தாசில்தாரின் கவனக்குறைவு…. “இது சகஜம்” சமாளித்த ஆட்சியர்…!!

2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த குடும்பம் ஒன்று கர்நாடக மாநில கதக் மாவட்டம் முண்டரகி நகரிலுள்ள ஹீட்கோ காலனியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரையில் சுகாதார, வருவாய் மற்றும் போலீஸ் தலைமையிடம்  அவர்களது தொலைபேசி என்ணானது வழங்கப்படும். அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் கேட்கக்கூடிய விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செல்போன் என்ணானது வழங்கப்படும்.  இதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டதை   கோபமடைந்த முண்டரகி தாசில்தார், ஆதித்யாஸ்ரீ கும்பாரா என்ற நபருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அக்கடிதத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாங்கள் தொலைபேசியை அணைத்து வைத்துள்ளது தேசிய பேரிடர் தடுப்பு சட்டம் 2005 , விதி 15 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 188 போன்ற பிரிவுகளில் கீழ் குற்றம் என கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரையில்  தொலைபேசியை அணைத்து வைத்தால் தங்களுக்கு 14 நாட்களுக்கு கூடுதல் வீட்டு தனிமை விதிக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார். தாசில்தார் அனுப்பிய இக்கடிதம்  அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி கதக் மாவட்டத்தின் கலெக்டர் சுந்தரேஷ் பாபுவிடம் கேட்கும்போது, ஆதித்யா ஸ்ரீ கும்பாரா என்ற பெயர் இரண்டு வயது பெண் குழந்தையின் பெயர் என்றும், பணி சுமையினால் இவ்வாறு நடப்பது சகஜம் என்றும்  சாதாரணமாக காரணம் கூறி அம்மாவட்ட கலெக்டர் சமாளித்துள்ளார்.

Categories

Tech |