கஞ்சா மற்றும் கவுன்சிலர் கொலை வழக்குகளில் விசாரணை செய்ய புதிதாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் 26- தேதி இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடோனில் வைத்திருந்த பட்டா கத்திகள்,கஞ்சா மற்றும் செல்போன்கள் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின் அந்த வழக்குகள் காரணமாக காவல்துறை இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து வசீம் அக்ரம் கொலை வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நாகராஜன் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் டவுன் இன்ஸ்பெக்டராகவும் நியமித்து சரக டி.ஐ.ஜி பாபு உத்தரவிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு பதிலாக வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டராக திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து நியமிக்கப்பட்டிருக்கிறார்.