Categories
உலக செய்திகள்

என்ன….? 2 வாரங்களில்…. 6-வது முறை 2 ஏவுகணைகளை…. வடகொரியா ஏவியதா….?

அமெரிக்க படைகளுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா செயல்பட்டு வருகின்றது.

தென்கொரியா நாட்டில் கங்னியுங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமெரிக்கா நேற்று முன்தினம் 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 2 ஏவுகணைகளை தன் பங்குக்கு வெற்றிகரமாக சோதித்தது. இருப்பினும் அந்நாட்டின் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர “பாலிஸ்டிக்” ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு “பாலிஸ்டிக்” ரக ஏவுகணைகளை சோதித்தது. இதனை தொடர்ந்து முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டது.

இது 100 கி.மீ. உயரத்துக்கு சென்று 350 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. மேலும் 2-வது ஏவுகணை 50 கி.மீ. உயரத்திற்கு சென்று 800 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகனை கொரிய தீபகற்ப பகுதியில் நிறுத்தியுள்ள நிலையிலும் வடகொரியா அதற்கும் அஞ்சாது அதிரடியாக 2 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்திருப்பது சர்வதேச அரங்கை அதிர வைத்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |