வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் போன்றவற்றை 2 வருடங்களுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு பிறப்பிக்கப்படாவிட்டாலும் நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.