பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறப்படும் மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து ஈரானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.