Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ….! 22 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து தொடரை வென்று சாதனை…!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் லார்ட்ஸில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக  ரோரி பேர்னஸ், டான் லாரன்ஸ் தலா  81 ரன்களை குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 388 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே,  ராஸ் டெய்லர் தலா  80 ரன்களும் ,வில் யங் 82 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனால்  85 ரன்கள் பின்தங்கி  இருந்த இங்கிலாந்து அணி தனது 2 வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு  ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து  திணறியது.  இதனால் 3 வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய 4-வது நாள் ஆட்டதில் ,ஒல்லி ஸ்டோன் 15 ரன்னில்  ஆட்டமிழக்க, இங்கிலாந்து  122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில்  நீல் வாக்னர் தலா  3 விக்கெட்டுகளும் , டிரென்ட் போல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டை  கைப்பற்றினர் . இதனால் 38 ரன்களை இலக்காக கொண்டு 2 வது இன்னிங்சை  தொடங்கிய  நியூசிலாந்து  10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு,  இலக்கை எட்டி  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி , இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று  சாதனை படைத்துள்ளது. அத்துடன் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |