நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் அணியில் விளையாடுவது சந்தேகம் தான் என விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கியது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது .இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார் .அதோடு இந்திய அணியில் அறிமுகமான டெஸ்ட் தொடரிலேயே சதமடித்து அசத்திய 16-வது வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார் .இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி இந்திய அணியில் இடம்பெறுவதால் ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்த டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறும்போது,” அடுத்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி அணிக்கு திரும்பினால் நிச்சயம் ஸ்ரேயாஸ் அய்யர் தனது இடத்தை இழப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.ஏனெனில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 2016ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரகானேவிற்கு பதிலாக கருண் நாயர் களமிறங்கினார். அப்போது அவர் முச்சதம் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த போட்டியில் ரகானே அணிக்கு திரும்பியதால் கருண் நாயர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் கோலி அணிக்கு திரும்புவதால் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை .இது இந்திய அணியில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக ரகானே பார்ம் மோசமான இருப்பதால் அவரது இடத்துக்கு ஆபத்து உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.