Categories
உலக செய்திகள்

இரண்டு வெவ்வேறு தடுப்பூசி…. நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!

அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற 2 வகையான தடுப்பூசிகளை செலுத்தினால் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்கிறது. இது இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட் தயாரிக்கப்பட்டது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆசிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தினால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டு இதற்காக 100 தன்னார்வத் தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு தொடங்கப்பட்டு முதலாவதாக அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் 29 நாட்கள் பிறகு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவற்றில் முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம்  இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டது. அந்த ஆய்வின் 57-வது நாளன்று அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேருக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது. இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா ஆகிய நாடுகளிலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடைபெற்று வருகிறது.

Categories

Tech |