மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்றும்,
இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், மருத்துவ இடங்களை மத்திய அரசு மற்றும் நீட்தேர்வு நிர்வாகங்கள் முறையாக ஒதுக்கீடு செய்தால் மட்டுமே முறையாக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்காதது மருத்துவ மேற்படிப்பு ஒழுங்கு முறைகளையும் விதிகளையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வி வழங்கும் இட ஒதுக்கீடு சட்ட விதிகளை மீறுவது ஆகும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சுப்பையா அமர்வு விசாரித்தபோது, யார் யாருக்கு இடங்கள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதோ அவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசு வாதத்தை முன்வைத்து. இதையடுத்து மத்திய அரசு முழுமையாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதே போல திராவிடர் கழகம், திமுக, மதிமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.