Categories
அரசியல் மாநில செய்திகள்

செயற்கை சுவாசகருவி… 2 வார தீவிர கண்காணிப்பு…. அன்பழகன் கவலைக்கிடம் …!!

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் திமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.

மூத்த தமிழக அரசியல்வாதி ஆன க.அன்பழகன் திராவிடக் கொள்கையில் அதிக பற்று கொண்டுள்ளதால் ஆரம்ப காலம் முதல்  திமுகவில் முக்கியப் பங்கு வகித்து வந்தார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். 97 வயதான இவர் வயது மூப்பு , உடல் நலக்குறைவு காரணமாக சில வருடங்களாகவே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த 24ஆம் தேதி க.அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலம் மிக மோசமாக சென்றதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. செயற்கை சுவாசகருவி பொருத்தி, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திமுகவினர் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |