Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவிகளுக்குள் தகராறு…. 4 பேருக்கு கத்தி குத்து….. ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் ராணுவ வீரர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்த கொட்டபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான சரவணன் மற்றும் சின்னராஜ். இந்நிலையில் சரவணன் மனைவி கண்ணம்மாள் என்பவருக்கும், சின்னராஜ் என்பவரின் மனைவி தேவி என்பவருக்கும் நிலத்தில் மாடு மேய்ப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் வாய்த்தகராறு முதற்கட்டமாக ஏற்பட்டு, பின் சண்டை முற்றவே, ஊர் தலைவரிடம் சென்று பிரச்சனை குறித்து கூறி முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை ஊர் தலைவர் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தார். இதனால் திருப்த்தி அடையாத கண்ணம்மாவின் மகன்களான சிவலிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் தேவியின் வீட்டிற்கு ஆட்களுடன் நேரடியாகச் சென்று அங்கே இருந்த அவரது சித்தப்பா முறையான சின்னராஜ் அவரது மனைவி தேவி அவர்களது பிள்ளைகள் கவிதா பார்த்திபன் என 4 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளனர்.

பின் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |