அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் மணலை கடத்தி வந்தது தெரியவர, இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.