பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நியூசிலாந்திற்கு வந்த இரு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 140 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் 6 லட்சத்து 83 ஆயிரத்து 218 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 333 ஆக இருக்கின்றது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நாடாக நியூசிலாந்து இருந்து வந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நியூஸிலாந்து வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இரு பெண்களும் உடனடியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனால் நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22 ஆக அதிகரித்துள்ளது.மருத்துவமனை சிகிச்சைக்காக தற்போது வரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது.