கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார்களா? நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்களா ? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது.
பட்டினம்திட்டா மாவட்டத்தில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் 13 பெண்கள் காணாமல் போயிருப்பதாக ஒரு புகார் இருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் தான் போலீசார் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள். இரண்டு பெண்கள் மட்டும்தான் நரவலிக்காக கொன்று இந்த இடத்தில் புதைத்திருக்கிறார்களா ? அல்லது வேறு ஏதாவது பெண்களை இங்கு கொன்று புதைத்து இருக்கிறார்களா ? இவர்கள் எதற்காக இந்த கொலை, நரபலி கொடுத்தார்கள் ? என்ற முழுமையான விசாரணை நடத்தணும்.
என காவல்துறையினர் 12 நாள் போலீஸ் காவல் கேட்டிருந்தார்கள். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதி கிடைத்த காரணத்தினால் இந்த மூன்று பேரையுமே சம்பவம் நடந்திருக்க கூடிய பகவல் சிங்கினுடைய வீட்டிற்கு அழைத்து வந்து, அந்தப் பகுதியில் வைத்து தான் இந்த விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டு உள்ளார்கள்.