டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான மருந்தினால் ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தை மெடிக்கல் ஷாப்பிலிருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.இதனால் மீண்டும் மெடிக்கல் ஷாப் முதலாளி அக்குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (december 12) ஆம் தேதி ஊசி போட்டுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அக்குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது. பதறிப்போன குழந்தையின் தாய் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தவொரு நோயாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்துகளை வாங்காதீர்கள் இச்சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.