பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மியான்மரின் 2 வயதுடைய பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது.
கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. குழந்தையின் குடல் வயிற்றிலிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டது. பின்பு குடலில் இருந்த அந்த வண்ணங்கள் காந்த குண்டுகள் எடுக்கப்பட்டது.இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
குழந்தை சிகிச்சைக்காக ஒரு வாரம் கட்டாயம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதன்பிறகு மெக்காவின் தாயார் அந்த காந்த உருண்டையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வேறு யாராவது இதேபோல் காந்த உருண்டைகளை வாங்கி வைத்திருந்தாள் அதை தயவு செய்து தூக்கி எறிந்து விடுங்கள் என்று அனைத்து பெற்றோரையும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.