Categories
தேசிய செய்திகள்

2 வயது பிஞ்சு குழந்தையை… சாராயம் குடிப்பதற்காக… பெற்ற தந்தையே இப்படியா செய்யறது…!!!

மது வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது இரண்டு வயது மகளை தந்தையே குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. போதைக்கு அடிமையாகிய ரமேஷ் மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் தனது இரண்டு வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். குழந்தையை விற்று அந்த பணத்தில் அவர் சாராயம் வாங்கி குடித்துள்ளார்.

குழந்தையை காணவில்லை என்று அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. 2 வயது மகளை தந்தையே சாராயம் குடிப்பதற்காக விற்றதை அறிந்த குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |