வெளியில் அழைத்துச் செல்லும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் மத்திய மாநில அரசுகள் தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கூறியுள்ளது .அதுமட்டுமில்லாமல் வெளியில் வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது ஒடிசா மாநில அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பெற்றோர்கள் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தங்கள் வீட்டை விட்டு வெளியில் அழைத்து வரும்போது முக கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், சுவை தன்மை இழத்தல், வயிற்றுப்போக்கு அறிகுறிகள் உள்ள குழந்தைகளை உடனே தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறியுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.