கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு உடல்கூறு செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் டெலிகா ‘லீகா’ கிப்சன்(18) மற்றும் சமாரா குக்ஸ்(15) இருவரும் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை உடல்கூறு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
லீகா’ கிப்சன்
இதில் கிப்சன் இறந்த பின்பு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக முன்னரே எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார். கிப்சன் உடலிலிருந்து தானம் செய்யக்கூடிய உறுப்பு எடுப்பதற்கு பதிலாக குக்ஸ் உடல் உறுப்புகள் தவறுதலாக எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கிப்சன் மற்றும் குக்ஸ் ஆகியோரின் உடல் மருத்துவமனையிலிருந்து இறுதிச் சடங்குகள் நடக்கும் இடத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டது.
சமாரா குக்ஸ்
பின்னர் குக்ஸ்சின் தாய் இறுதிச்சடங்கில் செய்யப்படும் சம்பிரதாயத்திற்காக புதிய ஆடை எடுத்து வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் ; உங்கள் மகளுக்கு அணிய முடியாது எனவும் பெரிய துணி வேண்டும் என கூறியுள்ளார். அப்போதுதான் அங்கு இருப்பது தனது மகளின் உடல் கிடையாது என தெரியவந்துள்ளது.
இதனால் குக்ஸ் தாய் மனவேதனை அடைந்தார் தவறுதலாக உடல் அடையாளம் காணப்பட்டு உறுப்பு எடுக்கப்பட்டதால் காவல்துறையின் மீது வழக்கு தொடர்ந்தார்.