Categories
தேசிய செய்திகள்

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வெள்ளம்… இருவரின் உல்லாச பயணம்…. வைரலான காணொளி…!!

மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இளைஞர்கள் இருவர் மிதக்கும் படுக்கையில் படுத்துக்கொண்டே பேசியபடி சென்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் ஏற்கனவே பெய்ய வேண்டிய பருவ மழையில் ஆகஸ்ட் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 64 சதவீதத்தை பெற்றுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தெற்கு மும்பை பகுதி தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சாந்தாகுரூஸில் 162.3 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றுடன் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.

பெரிய கட்டிடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் காற்றில் பறந்து சென்றன. மும்பையின் தெற்குப்பகுதி கனமழையால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு இருக்கின்ற பெரும்பாலான பகுதிகள் மழை நீர் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் வெள்ளம் சூழ்ந்துள்ள ஒரு பகுதியில் இளைஞர்கள் இருவர் மிதக்கும் வகையிலான படுக்கையில், படுத்துக் கொண்டு பேசியபடியே செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், “இந்த சூழ்நிலையிலும் இவ்வளவு ஜாலியாக பயணம் செய்கிறார்கள்” என்று பலர் வேடிக்கையான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |