Categories
தேசிய செய்திகள்

“நண்பர்களின் செல்பி மோகம்” உயிரை காவு வாங்கிய 1000 அடி பள்ளம்… கதறிய பெற்றோர்கள்…!!

செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருக்கும் தாஹி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தினேஷ் மற்றும் பண்டி ஆகிய இருவரும் சுற்றுலா தளமான ராம்கர் கோட்டைக்கு போயுள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு பணியுடன் மழையும் பெய்து வந்ததால் நண்பர்கள் இருவரும் ஒரு பள்ளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த 1000 அடி உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர்களை தேட முயற்சித்தனர்.

ஆனால் அதிக அளவு மழை பெய்து கொண்டிருந்ததாலும் பணியினால் அவ்விடம் சூழப்பட்டு இருந்ததாலும் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளத்தில் விழுந்த இரண்டு இளைஞர்கள் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டனர் இருவரது சடலமும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்கிய பெற்றோர்கள் கதறி அழுதது அப்பகுதி மாக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |