Categories
இந்தியா தேசிய செய்திகள்

20மாடி கட்டடத்தில் தீ விபத்து…! 15பேர் காயம், 3பேர் கவலைக்கிடம்…. மும்பையில் பெரும் பரபரப்பு …!!

மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்னேகரும் சம்பவ இடத்தில் உள்ளார். விபத்தில் 15 பேர் காயமடைந்து அருகிலுள்ள பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் மருத்துவமனையின் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டும், 3பேருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  ஐசியூவில் உள்ளவர்களின் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

 

Categories

Tech |