Categories
உலக செய்திகள்

20வயது பெண்ணிடம் சில்மிஷம்…லண்டனில் நடந்த துயரம்… முக்கிய தகவலை வெளியிட்ட போலீஸ் …!!

லண்டனில் நள்ளிரவில் தனியாக சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டனை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த வருடம் செப்டம்பர் மதம் கிங்ஸ் கிராஸில்  உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனியாக சென்ற அந்த பெண்ணிடம்  இரண்டு முறை தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனிடையே அந்த நபரிடம் இருந்து தப்பி சென்ற இளம்பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான புகைப்படத்தை வைத்து அந்த நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? மேலும் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்ற தகவல்கள் சரியாக தெரியாத காரணத்தால் காவல்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அதனை தங்களிடம் தெரிவிக்கவும் என்று பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்..

Categories

Tech |